நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். - (யோவான் 13:15). . இலங்கையில் ஒரு புத்த குடும்பத்தில் பிறந்தவர் வீரசூர்யா. இளம் வயதில் ஒரு ஆலய ஆராதனையில் கலந்து கெண்ட போது, கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். அப்போது இவருக்கு வயது 25. தன் இருதயத்தில் நிறைந்த இயேசுவை தன் நணபர்களுக்கு அறிவிக்க தொடங்கினார். அநேகர் இவர் மூலம் இரட்சிக்கப்பட்டனர். இரட்சண்ய சேனை என்ற இயக்கத்தில் உறுப்பினராக இணைந்த இவர் அன்பையே ஆதாரமாக கொண்டு கிறிஸ்துவை போல் வாழ்ந்து காட்டினார். . புத்த வாலிபர்கள் சிலர் இவர் கிறிஸ்தவத்தை பரப்புவதன் நிமித்தம் இவர் மேல் எரிச்சலுற்று, இவரை கொலை செய்ய வகை தேடினர். அதை அறிந்த சூர்யா அவர்களை ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள் வரவழைத்தார். தான் கையில் எடுத்து சென்ற கயிற்றை அவர்களிடம் கொடுத்து, ஒரு மரத்தில் தன்னை கட்டச் சொன்னார். பின்னர் கத்தியை அவர்களிடம் கொடுத்து, தன்னை அவர்கள் விருப்பதிற்கு வெட்ட சொன்னார். அவர்களோ காரணமின்றி சூர்யாவை பகைத்ததை எண்ணி வெட்கி மன்னிப்பு கேட்டனர். . 150 ஐரோப்பியருக்கும், 150 இந்தியருக்கும் தலைவராக சில காலம் பணியாற்றினார். ஒரு முறை இரு வேலையாட்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற சண்டை அது. இறுதியில் இவ்வழக்கு சூர்யாவிடம் வந்தது. வேலையாட்கள் இருவரையும் அழைத்தார். அவர்களை உட்கார வைத்து அவர்களின் கால்களை கழுவ ஆரம்பித்தார். அவர்களோ வேண்டவே வேண்டாம் என்று கண்ணீர் விட்டனர். இருப்பினும், சூர்யாவின் செயலால் அவர்களின் மனம் மெழுகு போல உருகியது. கண்ணீரோடு அவர்கள் தங்கள தவறை உணர்ந்து, பெரியவர் சிறியவர் என்ற சண்டையை மறந்து சகோதரர் ஆயினர். இவர் தன் வாழ்நாளெல்லாம் அன்பையே ஆதாரமாக கொண்டு கிறஸ்துவைப்போல வாழ்ந்து காட்டினார். அன்று இயேசுவுடன் இருந்த 12 பேரும் வெவ்வேறு விதங்களில் குறையுள்ளவர்களாகவே இருந்தனர். ஆனாலும் இயேசு அவர்களுக்கு பொறுமையை கற்று கொடுத்து, அன்பாய் தவறுகளை சுட்டி காடடினார். அவர்களுக்கும் யார் பெரியவன் என்ற எணண்ம் மேலோங்கியபோது 'உங்களில் தலைவனாயிருக்க விரும்புகிறவன் யாவருக்கும் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன் என்றார். அவர் தாம் மரிப்பதற்கு முன்பதாக, தன்னை காட்டி கொடுக்கபோகிறவனையும், தன்னை மறுதலிக்க போகிறவனையும் அன்போடு கால்களை கழுவி தன் வஸ்திரத்தால் துடைத்து தாழ்மையையும் அன்பையும் வெளிப்படுத்தினார். . நாம் பிறரது தவறகளை திருத்தும் முயற்சியில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறோம்? பிள்ளைகளிடமோ, பணியாளரிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ நாம் நடந்து கொள்ளும் விதம் எப்படி? நீதிபதியாய் தீர்ப்பிடுவது எளிது, நிதானமாய் அன்போடு எடுத்து கூறுவது கடினமே. பொதுவாக பிறருக்கு அட்வைஸ் பணணுவது என்றால் எல்லாருக்கும் பிடித்ததே. தவறு செய்தவர்களை குற்றவாளியாக கண்டு ஒதுங்கி விடுவதும், நம்மை பரிசுத்தவான்களாக காண்பிப்பதும் நமக்கு பிடித்ததே. ஆனால் அவர்களிடம் அன்புசெலுத்துவதென்பது நம்மால் இயலாத காரியம். ஆனால் அடிக்கு அடிபணியாதவர் அன்பிற்கு அடிபணிவர் என்பது பழமொழி. கடிந்து கொள்வது மிக அவசியமே, பிரம்பை கையில் எடுப்பது மிக தேவையானதே. ஆம் பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான் என கூறும் வசனம், அதோடு முடிந்து விடாமல், அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் என முடிகிறது. அன்பே இவ்வுலகில் சிறந்தது, உயர்ந்தது. அந்த அன்பை அனைவரிடமும் காட்டிய இயேசுவின் முன்மாதிரியை வாழ்ந்து, வார்த்தையிலல்ல, வாழ்வில் பிறரை ஆதாயப்படுத்துவோம். . தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மைப் போல் என்னை மாற்றிடுமே . |