கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள். நம் அனைவருடைய ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு. சகோதரனுக்கு கர்த்தர் பரிபூரண சுகத்தை கட்டளையிட்டிருக்கிறார். வைத்தியர்கள் சில உடற்பயிற்சிகளை செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி செய்யும்போது சரியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள். ஜெபித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றி. தொடர்ந்து அனுதின மன்னா ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். , 'தேவன்...தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். - (1கொரிந்தியர்12:11). , ஒரு காட்டில் ஒரு யானை வசித்து வந்தது. அந்த யானை எப்பொழுதும் மற்ற பறவைகளோடும், மிருகங்களோடும் தன்னை ஒப்பிட்டு பார்த்து மனம் சோர்ந்து போனது. அதனால் அதன் முகம் கவலையினாலும் துக்கத்தினாலும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். ஒருநாள் சிட்டு குருவி உயர எழுந்து பறந்து போவதை பார்த்தவுடன் அந்த யானைக்கு தாங்க முடியாத துயரம் வந்து விட்டது. 'எனக்கு சிறகுகள் இல்லையே, ஆகாயத்தில் பறப்பதற்கு' என்று தேம்பி அழுதது. உணவு சாப்பிட கூட விருப்பமில்லை. , அங்கே ஒரு அருமையான நைட்டிங்கேல் பறவை இனிமையாக பாடி கொண்டிருந்தது. யானைக்கு இன்னும் கவலை அதிகரித்து விட்டது. 'இந்த பறவைகளெல்லாம் இவ்வளவு அழகாக பாடுகிறதே எனக்கு மட்டும் பாடுகிற தாலந்தை தரவில்லையே, கடவுள் ஒர வஞ்சனை செய்து விட்டாரே' என்று தேம்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் ஒரு வண்ணத்துப்பூச்சி அழகாக மலரின் மேல் அமர்ந்து தேனை உறிஞ்சி சுவைத்து கொண்டிருந்தது. யானை அதை கண்டவுடன்'வண்ணத்துப்பூச்சிக்கு மட்டும் தேவன் சுவையான உணவை கொடுத்திருக்கிறார். ஆனால் நானோ சுவையற்ற மரங்களையும், இலைகளையும் சாப்பிட்டு காலத்தை தள்ளி கொண்டு இருக்கிறேனே' என்று புலம்பியது. , புள்ளி மான்கள் துள்ளி ஓடுவதை யானை கண்டவுடன் 'ஐயோ அழகிய புள்ளி மான்களின் நிறம் எனக்கு இல்லையே, வேகமாய் ஓட மெல்லிய கால்கள் இல்லையே' என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்தியது. அங்கே எறும்புகள் பூமிக்கடியில் சென்று வருவதை பார்த்து தனக்கு பூமிக்கு அடியில் சென்று வர வழியில்லையே என்று அழுது கொண்டேயிருந்தது. கடைசியில் அந்த யானை மிகவும் மெலிந்து பெலவீனப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. அப்பொழுது காட்டிலுள்ள மிருகங்களும் பற்வைகளும், அந்த யானையிடம வந்து 'யானையாரே, கர்த்தர் உங்களுக்கு எவ்வளவு வல்லமையும், பெலனையும் தந்திருக்கிறார்! எவ்வளவு வலிமையான பெரிய கால்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. உங்கள் தந்தம் எவ்வளவு விலையேற பெற்றது! சிருஷ்டிப்பிலே நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எண்ணி பாருங்கள், உங்களை குறித்து யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று பழமொழியே சொல்கிறார்களே' என்று தேற்றின. அப்போழுதுதான் கர்த்தர் தனக்கு கொடுத்த மேன்மையை எண்ணி நன்றி சொல்ல ஆரம்பித்தது. , இவ்வுலகிலே எல்லா திறமைகளும், ஒருங்கே பெற்றவர் எவருமில்லை. ஓவ்வொருவருக்கும் வெவ்வேறு கிருபைகளையும், தாலந்துகளையும் தேவன் கொடுத்துள்ளார். அதை நாம் ஒருவரோடொருவர் ஒப்பிட்டு பார்த்து, எது பெரியது, எது சிறந்தது என்று கணக்கிடுவதற்கல்ல. அவர்களிடமுள்ளது நமக்கு இல்லையே என இல்லாதவைகளையே எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை. நம்மை தேவன் எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ, அங்கிருந்து என்ன செய்ய முடியுமோ அதை முழு பெலத்தோடு செய்ய முயற்சிக்க வேண்டும். குறைவுகைள எண்ணி நம்மையே குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்காமல், நிறைவுகளை எண்ணி சந்தோஷப்பட வேண்டும். ஒரு வீட்டை கட்ட வேண்டுமானால் விலையுயர்ந்த மார்பிள் கற்கள் மட்டும் இருந்தால் போதுமா? சாதாரண ஜல்லி கற்களும், செங்கல்லும், மண்ணும், தண்ணீரும் எவ்வளவு முக்கியம்? அதுப்போலத்தான் சிறிய பெரிய தாலந்துகளுடையவர்கள் அனைவரும் தேவ ராஜ்ஜியத்தின் கட்டுமான பணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் எந்தவித ஒப்பீடும் நம் உள்ளத்தில் தோன்றாது. நானும் தேவ ராஜ்யம் உலகில் நிலை நாட்டப்பட என்னால் இயன்றதை செய்வேன் என மகிழ்வோடு, கர்த்தர் நமக்கு பகிர்ந்தளித்த கிருபையில், தாலந்தில் நம்மால் இயன்றதை கர்த்தருக்காக செய்வோமாக! ஆமென் அல்லேலூயா! , எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே - என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே .. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான் அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை அதை நான் மறப்பேனோ |