காய்க்காமல் பழுத்திடும் கசக்காமல் இனித்திடும் பலவண்ணப் பழங்களை பலருக்கும் தந்திடும் நித்திய வாழ்வை நீ அடைய நித்தமும் இது தேவை -அது என்ன? விடை: ஆவியின் கனிகள். - கலா 5:22,23. =================================================== கூட்டிப் பார், கழித்துப் பார் முட்டிப் பார் மோதிப் பார் புத்தியிருந்தால் கணக்குப் பார் முயன்று நீயும் தப்பிப் பார் -அது என்ன? விடை: 666. - வெளி 13:18. ==================================================== வேர் விட்டு பரவும் விதை இன்றி வளரும் வேதனை இதனால் பெருகும் விசுவாசம் அதனால் சரியும் -அது என்ன? விடை: பண ஆசை. - 1 தீமோ 6:10 ==================================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |