சின்னத்தம்பி, பெரியத்தம்பி சிலையாய் மலைத்து நிற்க துண்டக் காணோம் துணியைக் காணோம் எதிரிகள் எல்லாம் ஓட முப்பத்தொரு ராஜாக்களை முறியவே அடித்தான் -அவன் யார்? விடை: யோசுவா – யோசு 12:1-24. ==================================== மாடு போனால் தேடலாம் மானம் போனால்…! மானத்தைக் கல்லில் கட்டி கடலிலே தூக்கி எறிந்து மதிக் கெட்டு நடந்தனர் அக்காவும் தங்கையும் -அவர்கள் யார்? விடை: அகோலாள், அகோலிபாள் – எசே 23:1-4. ==================================== ஒரு கல்லில் இரண்டு மாங்காயாம் ஒரே கல்லில் எழுபது கொலையாம் - கொலைகாரன் யார்? விடை: அபிமெலேக்கு – நியா 9:5. ==================================== இரவும் பகலும் படித்தவன் இளைத்துக் களைத்துப் போனானாம் மூளை எட்டிப் பார்க்கவே ரோட்டிலே அலைந்து திரிந்தானாம் -அது எதினால்? விடை: அதிகபடிப்பு – பிர 12:12. ==================================== |