ஆட்கள் இரண்டு, அடித்ததால் இரண்டு கேட்டது இரண்டு, பிரித்தது இரண்டு கிழித்தது இரண்டு, கிடைத்தது இரண்டு கூப்பிட்டது இரண்டு, வந்தது இரண்டு செத்ததோ நாற்பத்து இரண்டு இவையனைத்தும் இரண்டில் இரண்டு -வாசிப்பது எங்கே! விடை: 2 இராஜாக்கள் 2:2 ==================================== ஊசி முனையில் தவமிருந்தாலும் ஊசிக் கண்ணில் வானம் தெரிந்தாலும் ஊசிக் காதில் ஒட்டகம் போனாலும் இவன் போக முடியாது பரலோகம் -அவன் யார்? விடை: ஐசுவரியவான் – மத் 19:23,24. ==================================== தலைவர்களின் கூட்டத்தில் தலையை ஆட்டி ஆடி தலையை வாங்கிச் சென்றாள் -அவள் யார்? விடை: ஏரோதியாளின் குமாரத்தி – மத் 14:6-11. ==================================== இந்தியா என்று சொல்லடா இன்றே நிமிர்ந்து நில்லடா இதயத்தில் துணிச்சல் கொள்ளடா இகத்தை இயெசுவுக்காய் மாற்றடா இந்தியா வேதத்தில் உள்ளதடா -அது எங்கே? விடை: எஸ்தர் 1:1. ==================================== |