உலக உருண்டை உருண்டு கீழே விழுந்து கிடக்குது -அது எங்கே? விடை: பொல்லாங்கனுக்குள் – 1 யோவான் 5:19 ==================================== ஏசி ரூமிலே கத்திக் குத்து எமலோஜம் சென்றான் அதின் சொந்தக் காரன் -அவன் யார்? விடை: மோவாபின் ராஜா எக்லோன் – நியாய 3:14-25. ==================================== அழகிலே சிறந்தவருக்கு ஆயிரங்கள் ஈடில்லை உலகிலுள்ள அழகையெல்லாம் ஒன்று சேர்த்து இணைத்தாலும் ஒன்றுமே அவருக்கு நிகரில்லை -அவர் யார்? விடை: என் நேசர் – உன்னத 5:10-16 ==================================== ஒரு மரமாம் அந்த மரத்துக்கு 12 கிளையாம் அதில் ஒன்று உடைந்து போனதாம் உடைந்த கிளையின் கீழே அந்த மரம் தஞ்சம் புகுந்ததாம் -அது யார்? விடை: யாக்கோபு – ஆதி 47:1-11. ==================================== |