வேஷம் போட்டு மோசம் செய்யும் நாச மனிதரை மீட்டிடவே பாசம் வைத்து நேசக் குமாரனை தேசத்திற்கு தந்தாரே. – அவர் யார்? விடை: தேவன். யோவா 3:16. -------------------------------------- ஆசீர்வாத பிரசங்கம், ஆவியில் நிறைந்த பிரசங்கம் ஆளை மயக்கும் பிரசங்கம், ஆளுக்கொரு பிரசங்கம் எத்தனை பிரசங்கம் கேட்டாலும் இதனை அறிக்கை பண்ணாவிட்டால் எதனையும் நம்பக் கூடாதாம் – எதனை? விடை: இயேசு தேவனுடைய குமாரன். 1யோ 4:3. ------------------------------------------------- பந்தா பந்தா பந்தா பறபறக்கும் பந்தா கிப்பித்தலை தொப்பித்தலை தன் தலை தனக்கே ஆபத்து - அவன் யார்? விடை: அப்சலோம், 2 சாமு 18:9-15. ------------------------------------------------- நன்றி: 'வேதாகம நண்பன்' |